Wednesday, January 12, 2011

நிலவொளியில் காய்கின்றன







அப்பாவின் ஆடைகள்
அவரைப் போலவே 
விரைப்பாய்க் காய்கின்றன

அம்மாவின்   புடவைகள்
அவளின் சுபாவம் போலவே 
 நெளிந்து    தவழ்கிறது

அக்காவின் தாவணி
அடுத்தநிமிடத்தில் பறக்கஇருக்கிறபறவையைப்போல
சற்று தள்ளி படபடக்கிறது  

தம்பியின் ஆடைகள்
எக்களித்து உரசியவாறு

இரவு நிலவொளியில் காய்கின்றன  
எடுக்க மறந்த
எங்களின் நேற்றைய உடுக்கைகள்  

6 comments:

சமுத்ரா said...

nice! nice!!!!!

ரவிஉதயன் said...

நன்றி சமுத்ரா

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உவமை நயம்! அருமை! இந்த பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது வாழ்த்துக்கள்!

Unknown said...

சிம்பிள் மற்றும் அருமை

ரவிஉதயன் said...

.அன்பும் நன்றியும் ஜெயந்தி அம்மா

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும் சுரேஷ்