Wednesday, January 5, 2011

அம்மாவின் இசை









இரவில் செவிமடுக்கிறேன்.
தாழந்த குரலில்
முணுமுணுக்கிற வரிகளை

அதுஒரு பாடலல்ல,
விதிகளுக்கு உட்பட்ட
இசையுமல்ல.

அது தன்
நெடிய மௌனத்தை
உடைக்கிறமுயற்சி
சுமைகளைஅகற்றும் ஒருசாதுர்யம்
தற்காலிகமாய்
மூச்சுவிடுவதற்கான
ஒரு போராட்டம்.

உயிர்மையில் வெளியான எனது கவிதை
(அம்மாவுக்குச் சமர்ப்பணம்)

4 comments:

ANBAZHAGAN said...

ammaavin isaai yaarralum kavanikkappatuvathillai. kavithai arumai.paaraattukkal.

ரவிஉதயன் said...

தங்களின் விமர்சனதிற்கு நன்றி அன்பழகன்

Unknown said...

இந்தக் கவிதையில் ஒரு அம்மாவாக என்னையே நான் பார்க்கிறேன்.

ரவிஉதயன் said...

.அன்பும் நன்றியும் ஜெயந்தி அம்மா